
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: சித்திரை திருவிழா வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவின் 8 வது நாளில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவருக்கு செங்கோல் வழங்கப்படும். தற்போது அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி இருந்து வருகிறார். அவர் கணவரை இழந்தவர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

எனவே ஆகம விதிகளின் படி திருமணம் ஆகாதவர், கணவனை இறந்தவர் செங்கோலை பெற்று கொள்ள முடியாது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் விசாரணை வந்த நிலையில், ‛கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது? என்று ஆகம விதிகளில் எந்த இடத்தில் கூறியுள்ளது. இந்த கோவிலுக்குள் இந்துக்கள் மட்டும் தானே செல்கிறார்கள். செங்கோல் வாங்க போறதும் இந்து தானே. தற்போது திருவிழா தொடங்கி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த மனு அளித்தது ஏற்புடையது அல்ல என்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.