மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா?  - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா?  - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறையா: பெண்களாக பிறந்தவர்களுக்கு மாதந்தோறும் மூன்று நாட்கள் மிக கொடுமையாக அமையும். அந்த நாட்கள் தான் மாதவிடாய் காலம். அப்படிப்பட்ட அந்த நாட்களில் பெண்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. மிகுந்த சோர்வு ஏற்படும்.

இந்நிலையில்  மாதவிடாய் காலங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஒரு பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அதாவது, ” மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்கினால் பெண்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். இது பெண்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. அதையும் மீறி பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளித்தால் பணியிடங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும்.

இதையும் படிங்க: தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

எனவே மாதவிடாய் விடுப்பு விவகாரம் குறித்து அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மனு அளித்த மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கைகளை முன் வைக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *