சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தில் அதிகளவில் காணப்படும் வைரம் என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Mercury planet has Huge Deposits Of Diamonds
புதன் கிரகத்தில் அதிகளவில் காணப்படும் வைரம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
புதன் கோள் :
சூரிய குடும்பத்தில் முதலாவதாகவும் பூமிக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தில் விலையுர்ந்தாக கருதப்படும் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதன்கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள்பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் தற்போது வெளியாகி உள்ளது.
ஆய்வு தகவல்கள் :
அந்த வகையில் புதன் கிரகத்தில் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு போன்ற கலவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது 9 மைல் (14 கி.மீ.) தடிமனில் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதீத வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக தரைப்பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறி இருக்கலாம் என்றும்.
மேலும் புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், அதில் உள்ள கார்பன், சிலிக்கா, வைரம் உள்ளிட்டவை உருகிய நிலையில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் – ஆதார் எண் கட்டாயம் !
இருப்பினும் அவ்வளவு சுலபமாக அங்குள்ள வைரத்தை வெட்டி எடுக்க சாத்தியக்கூறு இல்லை. அதுமட்டுமல்லாமல் புதன் கிரகத்தின் காந்தப்புலம் அல்லது புவியியல் கட்டமைப்புகள் குறித்து தெரிந்துகொள்ள இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2024
சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்