மேஷம் சனிப்பெயர்ச்சி 2025 | ஆரம்பிக்கும் 7 1/2 சனி || என்னென்ன பலன்கள்?
கடந்த சில நாட்களாக பக்தர்கள், ஜோதிடர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn’s transit) தொடர்பாக பல்வேறு செய்திகளை வெளியீட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக, இந்த ஆண்டு 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவிய நிலையில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் இதற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த வருடம் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவித்தது. இன்றைய திருக்கணிதப்படி நாளை மார்ச் 29.3.25 அன்று கும்பத்தில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். எனவே இந்த சனிப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம் சனிப்பெயர்ச்சி 2025:
மார்ச் 29 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2, 6 மற்றும் 9-ம் வீட்டைப் பார்க்கிறார். மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் ஏழரைச் சனியின் காலம் தொடங்க இருக்கிறது. ஆனால் இதற்கு பயப்பட தேவையில்லை.
ஏனென்றால் சனி பகவான் 12-ல் சென்று மறைவதால், உங்கள் வாழ்க்கையில் தடைபட்டு வந்த காரியங்கள் நீங்கும். அதுமட்டுமின்றி, உங்கள் மனதில் உள்ள அவநம்பிக்கை, மனச்சோர்வு நீங்கும். சனி பகவானின் பார்வை உங்களிடம் இருந்து விலக போவதால், தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காண்பீர்கள்.
ஆன்மிகம் | இன்று | திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் | அங்கு என்ன விசேஷம் தெரியுமா?
இந்த சனி பெயர்ச்சியா செலவுகள் அதிகமாக இருந்தாலும் கூட, அது அனைத்தும் சுபச் செலவுகளாக அமையும். குடும்பம் என்று எடுத்துக்கொண்டால், தாம்பத்தியம் இனிக்கும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகள் தீரும்.
கூலி வேலை செய்பவர்களுக்கு உடல் உழைப்பு, அலைச்சல் அதிகரிக்கும். மேஷ ராசி மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.
மேலும் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் நீங்கள் வாங்கிய வட்டி கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மே மாதத்திற்கு பிறகு சொந்த வீடு கட்டும் யோகமும் உண்டு.