வாட்ஸ்அப்பில் புது வசதி இமேஜ் சர்ச் (Image Search) : இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் மூழ்கி கிடக்கின்றனர். குறிப்பாக வாட்சப் செயலி மூலம் மக்கள் ஒருவொருக்கொருவர் தகவல்களை பரிமாறி கொள்ள பயன்படுகிறது.
மேலும் இந்த செயலியை மெட்டா நிறுவனம் வாங்கியதில் இருந்து தொடர்ந்து பல்வேறு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போதும், ஒரு புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி, புதிய இமேஜ் சர்ச் (Image Search) அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அம்சம் மூலம் வாட்ஸ் அப்பில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க வழிவகுக்கும்.
வாட்ஸ்அப்பில் புது வசதி இமேஜ் சர்ச் (Image Search)
அதுமட்டுமின்றி வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் போட்டோக்களை சரிபார்க்கும் வழிமுறையை வழங்குகிறது. மேலும் புகைப்படத்தை பார்க்கும் போது திரையில் தெரியும் மூன்று-புள்ளியை கிளிக் செய்தால், “Search on Web” என்ற ஆப்ஷன் தென்படும். இது பயனர்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்யும் வசதியை கொடுக்கிறது.
ராணுவ வீரர்களை திடீரென சந்தித்த TVK தலைவர் விஜய் – பின்னணி என்ன தெரியுமா?
மேலும் வாட்ஸப்பில் பகிரப்படும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டவையா அல்லது மார்பிங் செய்யப்பட்டவையா என்பதை ஈசியாக கண்டறியலாம். எனவே இந்த வசதி புகைப்படத்தின் நம்பகத்தன்மையை எளிமையாக உறுதிப்படுத்த முடியும். இதே போல் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் (Google Reverse Image Search) வசதி பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு