தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதுமட்டுமின்றி நாளை (24.08.2024) முதல் வருகிற (29.08.2024)ம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். ஆனால் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். meteorological centre
Also Read: வாட்சப் யூசர்களே குட் நியூஸ் – இனி நீங்க நினைத்தால் மட்டுமே குரூப்ல சேர்க்க முடியும் – whatsappல் வந்த புதிய அம்சம்!!
மேலும் சென்னை புறநகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. weather report news in tamil
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு