தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழையால் தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான கனமழை பொழிந்த வண்ணம் இருக்கிறது.
மேலும் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது,” வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருகிறது. இதையடுத்து மத்திய மேற்கு பகுதியில் அதை ஒட்டி உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
Also Read: மாணவர்களின் கவனத்திற்கு – பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று!!
இந்நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் செப் 06ம் தேதி முதல் செப் 10ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை