ஓசூர் மற்றும் பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் - அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் !ஓசூர் மற்றும் பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் - அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயப்படுத்துவதற்காக சாத்தியக்கூறு பற்றிய ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது. Metro rail project between Hosur and Pommachandra bangalore

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா வரையிலான 23 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக ஓசூர் பகுதிகளை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இணைந்து தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தபடி

அத்திப்பள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திராவரை விரைவான மெட்ரோ போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றிய ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஓசூர் பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அந்த வகையில் மெட்ரோ ரயில் நிறுவன குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு,

ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் ஓசூர் துணை ஆட்சியர் பிரியங்கா ஆகியோரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் அத்திப்பள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு,

மேலும் தமிழ்நாட்டில் 11கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் பாதை 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும்,

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை !

அத்துடன் இந்த கூட்டத்தில் விரைவான போக்குவரத்து அமைப்பைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *