மெட்டி ஒலி சீரியல் நடிகர் விஷ்வா: தமிழ் சின்னத்திரையில் மக்களை தொடர்ந்து கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பல டிவி சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் ஒரு சில சீரியல்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் முடிந்துவிடுகிறது.
மெட்டி ஒலி சீரியல் நடிகர் விஷ்வா
ஆனால் 90ஸ் மற்றும் 20ஸ் சமயத்தில் வந்த சீரியல்கள் இப்பொழுதும் மக்களிடம் பேசப்படுகிறது. அதில் ஒன்று தான் மெட்டி ஒலி. கடந்த 2002ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலை திருமுருகன் என்பவர் இயக்கியிருந்தார். அவர் அந்த நாடகத்தை தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலை இயக்கி அவரே நடித்திருந்தார். கிட்டத்தட்ட ௧௪ சீரியல்களை இயக்கி இருந்தாலும், மெட்டிஒலி சீரியல் தான் நின்று பேசும்.
அந்த சீரியலில், செல்வம் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் விஸ்வநாதன். இதையடுத்து ஒரு சில தொடர்களில் நடித்திருந்தார். மெட்டி ஒலி போன்ற ஹிட் சீரியலில் நடித்த அவர் திடீரென சின்னத்திரையில் இருந்து காணாமல் போனார். அதன்பிறகு அவர் மீடியா பக்கம் ஆளவே கானம். இப்படி இருக்கையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம் – ஒன்று கூடிய சொந்தங்கள்!
மெட்டி ஒலி தொடருக்கு பிறகு இன்னொரு மெட்டி ஒலி வேண்டும் என்று நினைத்தேன். அட்லீஸ்ட் அதே ஒன் லைனில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அப்படி ஒரு கதை வராததால் நடிக்க முடியாமலே போய்விட்டது. எல்லாம் சீரியலும் மெட்டி ஒலி ஆகிவிட முடியாது, அதே போல எல்லா திரைப்படமும் பாகுபலி ஆகிவிட முடியாது.
எனக்கு வேறு சில வேலைகளும் இருந்ததால் அதில் கவனம் செலுத்தி இருந்தேன் என கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு
பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?
“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்