தமிழகத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து:
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு ஏகப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல ஊழியர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், 840 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து .., 2 பேர் பலி .., வெளியான ஷாக்கிங் தகவல்!
இதில் 3 பேருக்கு படு காயங்கள் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர். இந்நிலையில், நிலக்கரி டேங்க் சரிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மேலும் தொடர்ந்து இந்த விபத்தில் சில பேர் மாயமான நிலையில் அவர்களை பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!
அந்த நிலக்கரி குவியலில் தான் வெங்கடேசன் மற்றும் பழனிசாமி ஆகிய 2 தொழிலாளர்களின் உடலும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் அனல் மின் நிலையம் முன்பு உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனால், அங்கு இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025 பொங்கல் பரிசு தொகுப்பு.., இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !