Home » செய்திகள் » தவளை விஷம் குடித்து உயிரிழந்த 33 வயது நடிகை – ஆன்மீக நிகழ்வில் நடந்த பரிதாபம்!

தவளை விஷம் குடித்து உயிரிழந்த 33 வயது நடிகை – ஆன்மீக நிகழ்வில் நடந்த பரிதாபம்!

தவளை விஷம் குடித்து உயிரிழந்த 33 வயது நடிகை - ஆன்மீக நிகழ்வில் நடந்த பரிதாபம்!

உடலைத் தூய்மைப்படுத்தும் என்று நம்பி தவளை விஷம் குடித்து 33 வயது நடிகை உயிரிழந்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூட நம்பிக்கை:

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் போனாலும் சில விஷயங்கள் இன்னும் மாறாமல் இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக உலகின் பெரும்பாலான மக்களுக்கு மதம், கடவுள், அது தொடர்பான சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்து வருகின்றனர். இதில் எந்த தவறும் இல்லை என்று நமக்கு தெரியும். ஆனால் ஒரு சில சடங்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி அறியாமல், அதை செய்துவிட்டு உயிரிழக்கும் அபாயங்கள் வரை செல்கின்றனர்.

அந்த வகையில் உடலை தூய்மை படுத்துவதாக கூறி தவளை விஷம் குடித்து ஒரு  நடிகை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வட அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் தான் 33 வயதான நடிகை மார்செலா அல்காசர் ரோட்ரிக்ஸ்(Marcela Alcazar Rodriguez). இவர் மெக்சிகோவில் உள்ள ஹீலர் டிப்ளமோ பயிற்சி முகாமில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கலந்து கொண்டார். அந்த பயிற்சி முகாமில், உடலில் இருக்கும் அழுக்கை நீக்கி தூய்மைப்படுத்தும் சடங்கு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதன்படி, ராட்சத இலை தவளை எனப்படும் அமேசானிய தவளையின் விஷத்தை குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் அழுக்கை நீக்கி தூய்மையாகும் என நம்புகின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. இப்படி இருக்கையில் நடிகை மார்செலா இதை குடித்துள்ளார். அதை பருகிய கொஞ்ச நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

IND vs AUS : இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலிய Playing 11 அணி அறிவிப்பு!
தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வெள்ள நிவாரணம் – டோக்கன் எப்போது? வெளியான முக்கிய தகவல்!
சென்னை Airport-ல் பார்க்கிங் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு – நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா?
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் நாளை (06.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு –  வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (05.12.2024) பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top