கமலின் "மைக்கேல் மதன காமராஜன்" பட நடிகர் திடீர் மரணம் -  சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!கமலின் "மைக்கேல் மதன காமராஜன்" பட நடிகர் திடீர் மரணம் -  சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கமலின் “மைக்கேல் மதன காமராஜன்” பட நடிகர் திடீர் மரணம்: உலகநாயகன் நடித்த எல்லா படங்களும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக “மைக்கேல் மதன காமராஜ்” திரைப்படம் தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது.  ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த இந்த படத்தில் கமல் 4 கெட்டப்களில் நடித்திருந்தார். அந்த  படத்தை எந்த படத்தாலும் ரீ placement செய்ய முடியாது.

அந்த அளவுக்கு படத்தில் காமெடி முதல் சுவாரஸ்யம் வரை நிறைந்திருந்தது. இப்போது டிவியில் போட்ட கூட மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் பாலக்காடு கமலுடன் காமெடி கதாபாத்திரத்தில் வரது குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் ஸ்ரீ கோபிநாத ராவ் என்ற குள்ள கோபி.

இவர் சினிமா மட்டுமின்றி பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். சொல்ல போனால் அவர் கிரேசி மோகனின் ட்ரூப்பில் முக்கியமான நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் குறித்து ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

Also Read: ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை – அட இவங்கள – இதை யாருமே எதிர்பார்க்கலயே!

அதாவது ஸ்ரீ கோபிநாத ராவ் என்ற குள்ள கோபி நேற்று மாலை இயற்கை எய்தியுள்ளார். இது குறித்து மதுபாலா, வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அவரை தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.  மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *