மிக்ஜாம் புயல் சென்னையை மீட்க 5060 கோடி தேவை. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்கள் குறிப்பாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. மேலும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் சென்னையை மீட்க 5060 கோடி தேவை
ஹெலிகாப்டரில் உணவு டெலிவரி:
மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பெருக்கினால் வீடுகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு கஷ்ட படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதிப்படைந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டரிலன் மூலம் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.5060 கோடி நிதியுதவி:
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5060 கோடி வழங்குமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும் “மிக்ஜாம்” புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.என்றும் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி 7.12.2023 அன்று வரை சென்னை மாவட்டத்தில் உள்ள வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்ததுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (05.12.2023) ! புயலுடன் பவர் கட் இருக்கு !
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு:
“மிக்ஜாம்” புயலால் பெய்த கனமழையின் காரணமாக மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் (7.12.2023) நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடை பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் “வாட்ஸ் அப்” எண் அறிவிப்பு:
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளை சார்ந்த மீட்பு பணி குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால் நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வல குழுக்கள் , அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை அலுவலர்களின் வாட்ஸ் அப் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
அலுவலர் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் விவரம்:
ஷேக் மன்சூர், உதவி ஆணையர் – 9791149789.
பாபு , உதவி ஆணையர் – 9445461712.
சுப்புராஜ் , உதவி ஆணையர் – 9895440669.
பொது – 7397766651.
நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பதிவு கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.