மிக்ஜாம் புயல். வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் அதன் கரையை கடக்கும் வேகம் அதிகரித்து இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல மணி நேரம் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,ராணிப்பேட்டை ,விழுப்புரம் ஆகிய பகுதிகள் சாலைகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்க்கிறது. அனைத்து வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் செல்லத் தொடங்கிவிட்டது. மேலும் சாலைகள் மரங்கள் சாய்ந்து கிடைப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. சேதங்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் ஆனால் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (05.12.2023) ! புயலுடன் பவர் கட் இருக்கு !
இன்று பிற்பகல் அதிதீவிர புயலாக மாறி நெல்லூர்க்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையில் கரையை கடக்கும் போது சென்னையில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் ,தொழில் நிறுவனங்கள் மட்டும் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்
இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு பொறியியல் கல்லுரிகளில் நாளை நடைபெறவிருந்த அனைத்து வகையான தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள.
இதனால் பள்ளி கல்லூரி சம்மந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ள.