உலகில் விண்டோஸ் சேவைகளில் பாதிப்பு - பயனர்கள் அதிர்ச்சி!உலகில் விண்டோஸ் சேவைகளில் பாதிப்பு - பயனர்கள் அதிர்ச்சி!

Windows: உலகில் விண்டோஸ் சேவைகளில் பாதிப்பு: இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் விண்டோஸ் இயங்கு தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சில மணித்துளிகளில் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தெளிவாக சொல்ல போனால்  கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணமாக இருக்கும் என்று அந்நிறுவனம் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: ராஜஸ்தானில் வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று – அதிசயம்.., ஆனால் உண்மை? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

எனவே பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கிரவுட்ஸ்டிரைக் பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாதிப்பை சரி செய்வது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *