மினி பஸ் திட்டம் 2024 - புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு… எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?மினி பஸ் திட்டம் 2024 - புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு… எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

தமிழகத்தில் மினி பஸ் திட்டம் 2024: கடந்த 1997 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு  பேருந்து சேவை வழங்கும் விதமாக மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது  16 கி.மீ. வரை அரசு பேருந்து சேவை இல்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 1999ம் ஆண்டு ஆட்சியை பிடித்த திமுக அரசு இந்த மினி பஸ் திட்டத்தில் சிறிய மாற்றங்களை கொண்டு வந்தது.

அதாவது 16 கி.மீ. வரை செல்ல அனுமதி வழங்கிய நிலையில் அதை 20 கி.மீ. வரையாக உயர்த்தியது. இத்தனை வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்த மினி பஸ் கொரோனா காலகட்டத்தில் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட சிறிய பிரச்சனைகளால் மினி பஸ் ஒன்று இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர். இதனால் இப்பொழுது ஷேர் ஆட்டோ சேவை அதிகமாக காணப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மோட்டார் வாகன சட்டப்படி புதிய விரிவான மினி பஸ் திட்டம், 2024 வரைவு அறிக்கையை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மினி பஸ்கள் சேவை அதிகபட்சம் 25 கி.மீ தூரம் வரை இயக்கப்படும். அதில் 17 கி.மீ. பேருந்து சேவைகள் இல்லாத வழித்தடத்திலும், 8 கி.மீ. ஏற்கனவே பேருந்து சேவை இருக்கும் வழித்தடத்திலும்  இயக்கப்படும். மேலும் அனைத்து மினி பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் தொடங்கப்பட இருக்கிறது.

Also Read: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

ஜூலை 22ம் தேதி இது குறித்து உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே அதற்குள் இதில் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். 2018ல் புதிய மினி பஸ் விரிவாக்க திட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்த நிலையில், தற்போது புதிய வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *