தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை அதிகரிக்க அரசாங்கம் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. அதன்படி காலை உணவு திட்டத்தை அமல்படுத்திய நிலையில் இந்த திட்டத்தின் மூலம் எக்கசக்க மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் 22,1931 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் 8,209 தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கான பணிகளில் அரசு முழு தீவிரமாக இறங்கியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கையில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் தான் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு பள்ளியில் படித்தால் சலுகைகள் அதிகமாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து பொதுத் தேர்வுகள் ஆரம்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.