
மக்களவை தேர்தல்
லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் மக்களிடம் ஓட்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் மக்களவை தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனை தொடர்ந்து குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்காக கே.என்.நேரு வாக்கு சேகரித்து வந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் “எனக்கு மயக்கமாக இருக்கிறது. நான் ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் என்னுடைய துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் வந்த காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.