அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் ஜாமீன் கேட்டு தற்போது வரை உத்தரவு பிறப்பிக்காத நிலையில், கிட்டத்தட்ட 15 முறை ஜாமீனை தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியீட்டு அறிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்த படியே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை சிறை அதிகாரிடம் கொடுத்து முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் இது குறித்து அரசு சார்பாக எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் செந்தில் பாலாஜி அமைச்சர் என்பதால் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால் தான் அமலாக்கத்துறை ஜாமீன் கொடுக்க மறுத்து வந்தது. தற்போது அவர் ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும் அவரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாலும், தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் அரசே அவரை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.