லோக்சபா தேர்தல் எதிரொலி.., அமைச்சர் காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை.., பரபரப்பு!!

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் காரை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் மும்மரமாக இருந்து வருகிறது. மேலும் வாக்கு எந்திரங்கள் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மறுபக்கம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், நகைகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த வண்ணம் பறக்கும் படையினர் இருந்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் பிரபலங்கள் முதல் நடுத்தர மக்கள் வரை ஒரு வாகனத்தையும் விடாமல் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அமைச்சர் ஒருவரின் காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதாவது அரியலூர் அஸ்தினாபுரம் பகுதி வழியாக வந்த  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் நேற்று நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் கரையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும்  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்? – நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை!!

Leave a Comment