தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வெளியிடடுள்ளது. இதனை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு
சட்டமன்ற கூட்டத்தொடர் :
தற்போது தமிழக சட்டமன்ற மானிய கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானவனவர்களுக்கு ஊக்கத்தொகை :
தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் தொடருக்கு தேர்வானவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை அதிகரித்து 7 லட்சமாக வழங்கப்படும் என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மினி ஸ்டேடியம் :
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம் இல்லாத பட்சத்தில், தெரிவிக்கப்பட்ட அந்த தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பதிற்கான சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய்ந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளர் மேம்பாட்டு திட்டம் :
வெற்றியாளர் மேம்பாட்டு திட்டத்தில் தேசிய அளவிலான தங்க பதக்கம் வென்ற வீரர் அல்லது வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் நிதி தற்போது ரூ.4 லட்சமாக உயர்த்தி வழங்கப்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !
அத்துடன் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்றும், மேல்கோட்டையூர் அருகே SDAT பிரத்யயோக ஒலிம்பிக் Bicycle Motocross ஓடுபாதை அமைக்கப்படும் என்று விளையாட்டுதுறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் இல்லை
Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்