மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி:
இந்த நிலையில் உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் இந்த குடமுழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்த விழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஆனால் அங்குள்ள மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில், தேசிய பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த அநியாயக்காரர்களை அடையாளம் காணுங்கள் என்று . ராமர் கோவிலை எதிர்த்து, சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள் என்றும் இந்தியில் பதிவிட்டிருந்தனர். பாஜகவின் இந்த செயலுக்கு பதிலளிக்கும் வகையில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வசனம் உள்ள டி-சர்ட் அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.