பொதுவாக ஆன்மீகவாதிகள், வருடந்தோறும் நடக்கும் சனிப்பெயர்ச்சி எப்போது என்று எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் நாளை சனிபகவான் கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம், மிதுன ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். எனவே இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
மிதுன ராசியினருக்கு எதிர்பாராத அனுகூலம், செல்வாக்கு கூடிவரும். நீங்கள் இழந்த பணம் திரும்ப பெறுவீர்கள்.
கடன்களை விரைவில் அடைப்பீர்கள். புது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு வங்கியின் மூலம் கடன் கிடைக்கும்.
குழந்தை இல்லையே என்று ஏங்கிய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சமூகத்தில் செல்வாக்கும் மதிப்பும் உயரும்.
இந்த ராசியினருக்கு அவர்கள் விரும்பியபடி திருமண வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரம் பெருகும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.
புதிய நண்பர்கள் உறவு கிடைக்கும். மேலும் 4-ம் வீடு சனியின் பார்வையைப் பெறுவதால், புது வாகனம் வாங்குவீர்கள். யாரையும் நம்பி சாட்சி கையெழுத்து போட வேண்டாம்.
உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். மேலும் அறிவியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய படைப்புகளை கண்டுபிடிப்பீர்கள். அதற்காக சில விருதுகளும் கிடைக்கும்.
பொதுக் காரியங்களில் பங்களிக்க வேண்டாம். அதனால் வீண் விளைவுகள் ஏற்படும். வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம்.
பரிகாரம்:
ஒவ்வொரு புதன்கிழமைகளில் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 6 முறை வலம் வந்தால், தொட்டது எல்லாம் துலங்கும்.
தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் !
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !
சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள் ! சபரிமலை போறீங்களா இது உங்களுக்குத்தான் !
மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள், எங்கெங்கு உள்ளது வாங்க பாக்கலாம் !