எம்.எல்.ஏ மரணம்
லாஷ்ய நந்திதா என்ற பெண் பி ஆர் எஸ் கட்சி சார்பாக செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக விளங்கி வந்த அவரின் தந்தையின் மறைவுக்கு பின்பு தான் அரசியலில் களம் காண தொடங்கினார். வெறும் 37 வயதாகும் இவர் சமீபத்தில் நடந்த தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வாகை சூடினார். இதனை தொடர்ந்து பதவியில் வகித்து வந்த இவர் பல நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி வந்தார். அந்த வகையில் நேற்று நடந்த இரவு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்து தான் வந்த காரில் திரும்பிய போது சுல்தான்பூர் அருகே எதிர்பாராத விதமாக சாலை தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த விபத்தில் சிக்கிய அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், உடனே அவரை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நந்திதாவுடன் பயணித்த கார் டிரைவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.