
திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளது. தனது கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளுக்கு ஏற்கனவே போட்டியிடும் தொகுதியை ஒதுக்கிய நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
CLICK TO JOIN WHATSAPP TO GET DAILY NEWS
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் :
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல் அதிகாரரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில்,
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது ! போதைப்பொருள் கடத்தலில் அமீருக்கும் தொடர்பா ? – அறிக்கை வெளியிட்ட NCB தலைவர் !
இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம் என்றும் நான் எங்கு சேரவேண்டுமோ, அங்கு சேர்ந்துள்ளேன். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுகவிற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரச்சாரம் செய்யப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.