செல்போன் ரீசார்ஜ் கட்டண விலை அதிரடி உயர்வு: டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் 5G நெட் ஒர்க்-கை அமைத்திட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பயணர்களுக்காக தொடர்ந்து அடுத்தடுத்த வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் பயணர்களுக்கு ஷாக்கிங் தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது டெலிகாம் நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் (Mobile recharge) திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி இந்த திடீர் விலை உயர்வு மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கொண்டு வர திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் 25 சதவீதம் ரீசார்ஜ் கட்டணம் உயரும். சொல்லப்போனால் ஏர்டெல்லின் (airtel) சராசரி கட்டணத்தில் 29 ரூபாயும், ஜியோவின் (jio) சராசரி கட்டணத்தில் 26 ரூபாயும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொழில் துறையிலும் 10 முதல் 15 சதவீதம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு சந்தாதாரருக்கு 100 ரூபாய் அதிகரிக்கும். மேலும் இந்த விலை உயர்வால் நெட்வொர்க் கவரேஜ் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் BSNL நிறுவனம் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.