Home » செய்திகள் » ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்- மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி – எதிர்க்கட்சிகள் அதிர்ப்தி!!

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்- மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி – எதிர்க்கட்சிகள் அதிர்ப்தி!!

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்- மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி - எதிர்க்கட்சிகள் அதிர்ப்தி!!

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்: தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள 36 தொகுதிகளிலும் இருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே போல்  புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேலும் வாக்குப்பதிவு மிஷின் தயாராக இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்

அப்போது பாஜக கட்சிக்கு ஓட்டு போடும் பொழுது ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நான்கு இயந்திரங்களில் இந்த கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருக்கும் காங்கிரஸின் கைச்சின்னம் மற்ற சின்னங்களை விட சிறியதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AC Helmet வந்தாச்சு? இனி வெயிலை பார்த்து பயப்பட தேவையில்லை – ஆனா ரேட் எவ்வளவு தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top