கொரோனாவை தொடர்ந்து உலகில் உள்ள சில மாநிலங்களில் குரங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் முக்கிய பகுதிகளான உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 154 பேருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் 3 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதுவரை 38 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 18 வயது இளம்பெண் உட்பட இருவர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனவே இந்த குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த காய்ச்சல் பாதிப்புக்குள்ளான விலங்குகள் சாப்பிட்டு விட்டு போட்ட உணவுப் பொருட்கள் மூலம் பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.