தற்போது குரங்கம்மை நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பற்றிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரங்கம்மை நோய் தொற்று பரவல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
குரங்கம்மை நோய் தொற்று :
தற்போது குரங்கு அம்மை நோய் தொற்று பரவி வரும் நிலையில் இது குறித்து பொதுமக்களிடையே ஏற்படும் தேவையற்ற அச்சத்தை தடுக்க வேண்டிய அவசியம் பற்றி அனைத்து மாநில அரசிற்கு மத்திய அரசு சுகாதாரத்துறை தற்போது அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் குரங்கு அம்மை நோய் பரவல் தடுப்புக்காக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நாட்டுக்கு சென்று, சமீபத்தில் இந்தியா திரும்பிய நபருக்கு அந்நோய் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது இந்த நோய் தொற்று பரவும் அபாயத்தை எடுத்துரைக்கிறது. Monkeypox virus Epidemic spread
‘மீலாது நபி’ பொதுவிடுமுறை தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
அந்த வகையில் மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
குரங்கம்மை நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் குரங்கம்மை நோய் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்.
அத்துடன் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கை இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
மத்திய சுகாதார அமைச்சகம் குரங்கு அம்மை நோய் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அந்த வகையில் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.