"மூக்குத்தி அம்மன் 2" படத்தில் அம்மனாக யார் நடிக்கிறார்? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!"மூக்குத்தி அம்மன் 2" படத்தில் அம்மனாக யார் நடிக்கிறார்? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

Kollywood Update: “மூக்குத்தி அம்மன் 2” படத்தில் அம்மனாக நடிக்க போவது யார்: தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக தனது கெரியரை தொடங்கி தற்போது திரைத்துறையில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஆர் ஜே பாலாஜி.

மேலும் அவர் நடிப்பையும் தாண்டி சில படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன்.

இப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான போதிலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ஒரு அம்மன் திரைப்படம் இப்போது இருக்க காலகட்டத்தில் எப்படி செட்டாகும் என்று பலரும் விமர்சித்த போதிலும், படத்தில் ஆர் ஜே பாலாஜியின் காமெடியும், அம்மனாக நயனின் நடிப்பும் அல்டிமேட்டாக இருந்ததால் படம் அனைவரையும் கவர்ந்தது.

"மூக்குத்தி அம்மன் 2" படத்தில் அம்மனாக நடிக்க போவது யார்?

இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பார்ட் விரைவில் உருவாகும் என ஆர் ஜே பாலாஜி கூறியிருந்தார்.

மேலும் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக அம்மனாக திரிஷாவை நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது.

Also Read: நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி – வருத்தத்தில் சினிமா ரசிகர்கள்!!

இந்நிலையில் படக்குழு ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆர் ஜே பாலாஜி நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2” படத்தில் மீண்டும் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார் என்று இப்படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

kollywood cinema news – nayanthara movie – rj balaji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *