18 க்கும் மேற்பட்ட OTT தளங்கள் முடக்கம். தற்போது திரையரங்குகளுக்கு அடுத்தபடியாக திரைப்படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் OTT தளங்களில் வெளியிடப்பட்டு பெரும்பாலான மக்களால் விருப்பி பார்க்கப்படுகிறது. இந்த OTT தளங்களில் புதிய திரைப்படங்களை வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம் என்பதால் இந்த வகை தளங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு OTT தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 18 OTT செயலிகள் முடக்கம் :
குடும்ப உறவுகளை சிதைப்பது, நிர்வாண காட்சிகளை வெளியிடுவதுபோன்றவற்றை ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹண்டர்ஸ், ரேபிட் உள்ளிட்ட 18 OTT தளங்களை மத்திய அரசு முடங்கியுள்ளது. இவ்வாறு முடக்கப்பட்ட OTT தளத்தின் ஒரு செயலி கூகுள் பிளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு – அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !
மேலும் 19 இணையதளங்கள், 59 சமூக வலைதள பக்கங்கள், 10 செயலிகள் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.