ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் ஆசியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் இந்தியா 3 வது இடத்தை பிடித்துள்ளது.
ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல்
ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒன்று தான் லோவி இன்ஸ்டிடியூட் . இந்த இன்ஸ்டிடியூட் தொடர்ந்து ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை இப்பொழுது வெளியிட்டுள்ளது. most powerful in asia
பொதுவாக இந்த பட்டியலை ஒரு நாட்டில் இருக்கும் ராணுவத் திறன், கலாச்சாரம், எதிர்கால வளர்ச்சி, பொருளாதாரத் திறன், வெளிநாட்டு உறவு உள்ளிட்ட அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்பொழுதும் போல முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. மேலும் மூன்றாம் இடத்தில் ஜப்பான் இருந்த நிலையில், தற்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
Also Read: டாஸ்மாக் கடையில் QR-CODE மூலம் மது விற்பனை – குஷியில் மதுப்பிரியர்கள்!!
இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, இந்தியாவில் இளைய தலை முறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தான். இதையடுத்து 4-வது இடத்தில் ஜப்பான், 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா, 6-வது இடத்தில் ரஷ்யா, 7-வது இடத்தில் தென் கொரியா, 8-வது இடத்தில் சிங்கப்பூர், 9-வது இடத்தில் இந்தோனேசியா, 10-வது இடத்தில் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை
இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா