ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் - 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் !ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் - 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் !

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கும் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Motherson Electronics Company

தற்போது தமிழ்நாட்டில் தொழில் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் துறை உற்பத்தி ஹப் ஆக தற்போது தமிழகம் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்தும், குறிப்பாக சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறைக்கு வலுசேர்க்கும் விதமாக நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனம் தமிழகத்தில் 1800 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயாராகியுள்ளது.

நான் முதல்வன் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !

அந்த வகையில் சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சோஜிட்ஸ் மோதர்சன் தொழில்துறை பூங்காவில், சுமார் 68 ஏக்கர் பரப்பளவில் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிக்கும் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்காக சுமார் 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *