பாம்பு பிடி வீரரை கொத்திய ராஜநாகம் திடீர் மரணம் - திடுக்கிடும் பின்னணி என்ன?பாம்பு பிடி வீரரை கொத்திய ராஜநாகம் திடீர் மரணம் - திடுக்கிடும் பின்னணி என்ன?

Breaking News: பாம்பு பிடி வீரரை கொத்திய ராஜநாகம் திடீர் மரணம்: இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம் சாகர் -குரை பகுதியில் இருக்கும் தடுப்பு சுவர் அருகே ஒரு ராஜநாகம் சுற்றி திரிந்துள்ளது. உடனே பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியில் இருக்கும் பாம்பு பிடி வீரர் சந்திரகுமார் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. cobra

இதனை தொடர்ந்து அங்கு சென்ற  பாம்பு பிடி வீரர் சந்திரகுமார் 5 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வெற்றிகரமாக பிடித்தார். இருப்பினும் அவரிடம் இருந்து எஸ்கேப்பாக பார்த்த ராஜநாகம் அவரின் 2 கட்டை விரல்களையும் கடித்த போதிலும் பாம்பை பிளாஸ்டிக் பைக்குள் அடைத்தார்.

பாம்பு பிடி வீரரை கொத்திய ராஜநாகம் திடீர் மரணம்

இதனை தொடர்ந்து சந்திரகுமாரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சந்திரகுமார் அவரை பாம்பு கடித்த சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு அதிர்ச்சி தரும் விதமாக நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Also Read: IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக் – ஸ்ரீலங்காவை வீழ்த்துமா இந்திய அணி!!

அதாவது சந்திரகுமார் அங்கு சென்று பார்த்தபோது, அவரை கடித்த ராஜநாகம் அதே இடத்தில் இறந்து கிடந்தது. ஏய் எப்ட்றா என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சந்திரகுமார் ராஜநாகத்தை பிளாஸ்டிக் பையில் அடைத்ததால் காற்று போக கூட வழியில்லை என்பதால் பாம்பு இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, வனத்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *