
எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் கடத்திய பெண்: கடந்த வாரம் சோசியல் மீடியாவை புரட்டி போட்ட சம்பவம் என்றால் அது கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ தான். இதனை தொடர்ந்து அவருடைய வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவருடைய ஆதரவாளர்கள் அந்த பெண்ணை கடத்தி இருப்பதாகவும், கடத்தப்பட்ட பெண்ணின் மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து ரேவண்ணா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் கடத்தப்பட்ட அந்த பெண்ணை அவர் வீட்டில் இருந்து மீட்டனர். இப்படியாக அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை புகார் வருவது, பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பல கல்லூரியில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் கடத்திய பெண்