விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் - மத்திய பிரசதேச காவல்துறை அதிரடி ஆக்சன்!!விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் - மத்திய பிரசதேச காவல்துறை அதிரடி ஆக்சன்!!

Breaking News: விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்: பொதுவாக கல்வி நிறுவனங்கள் மற்றும் Government Exam க்கு பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் நிறுவனங்களை வெளி உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விளம்பரம் செய்யப்படுவது வழக்கம். மேலும் அந்த மாதிரி விளம்பரங்களில் நடிகர், நடிகைகளோ அல்லது இன்ஸ்டா celebrity போன்றவர்கள் தான் நடிக்கிறார்கள். Madhya Pradesh

விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்

இப்படி இருக்கையில் மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டத்தில் போட்டித் தேர்வாளர்களுக்கான தனியார் பயிற்சி மையம் ஒன்றிக்காக பெண் காவலர் ஒருவர் விளம்பரப்படுத்தி உள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் காவல்துறை தற்போது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது பெண் காவலர் நடித்தது குற்றமில்லை.

ஆனால் காவல் சீருடையிலேயே விளம்பரத்தில் ஈடுபட்டது பேசும் பொருளானது. இதனை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து ரத்லோம் காவல் கண்காணிப்பாளர் ராகுல் லோதா தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “ஒரு பெண் காவலர், தனது அரசாங்கத்தின் சீருடையில் ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தை ஊக்குவிக்கும் விதமாக நடித்துள்ளது தற்போது, சமூக ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

Also Read: TNPSC தேர்வர்களே தயாராகுங்க – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

எனவே காவல் சீருடையில் தனியார் நிறுவனத்தை விளம்பரப்படுத்திய அந்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது தவிர, அந்த பெண் காவலர் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *