
Breaking News: குரங்கு அம்மை தொற்று அதிகரிப்பு: ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில நாட்களாக Mpox or Monkeypox எனப்படும் குரங்கு அம்மை நோய் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோவில் கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அடுத்தடுத்து நாடுகளில் இந்த குரங்கு அம்மை நோய் பரவ அதிக வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இதுவரை குரங்கு அம்மை நோயால் 517 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குரங்கு அம்மை தொற்று அதிகரிப்பு

மேலும் இந்த நோய் பாதிப்பு 13 அண்டை நாடுகளில் அதிகமாக காணப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுவான அறிகுறிகள்:
காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள். குறிப்பாக முகத்தில், கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை கொப்பளங்கள் பரவக்கூடும். அதுமட்டுமின்றி நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் இருக்கக்கூடும்.World Health Organization
Also Read: சர்வதேச காற்றாடித் திருவிழா 2024: மாமல்லபுரத்தில் களைகட்டும் கார்ட்டூன் பட்டங்கள் – குவியும் மக்கள்!
பாதிப்புகள்:
இந்த நோய் தோன்றினால் கண் வலி அல்லது பார்வை மங்குதல். அதுமட்டுமின்றி மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற குறைபாடுகள் தோன்றும். Monkeypox
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு