
Breaking News: MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபரின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டார் என்று அண்மையில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
MR விஜயபாஸ்கர் நிலஅபகரிப்பு வழக்கு
தொழிலதிபர் புகார் கொடுத்த பேரில் காவல்துறை விசாரணையை தொடங்கிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவல்துறை அதிரடியாக கைது செய்தது. மேலும் இது தொடர்பாக 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து மேலும் ஒரு நபரை காவல்துறை கைது செய்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியாக இருந்த வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் பிரித்விராஜ் என்பவரை கரூரில் வைத்து சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Also Read: சீரியல் பார்த்த 30 மாணவர்களுக்கு தூக்கு தண்டனை – கடுமையான சட்டத்தை கொண்டு வந்த முக்கிய நாடு!
மேலும் அவரை தனி அறையில் வைத்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நிலஅபகரிப்பு விவகாரத்தில் இன்னும் சில பேர் உடந்தையாக இருந்திருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டம் ?
மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை