அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனல் என்ற பெயரில் ஜிம்மி டொனல்ட்சன் ( jimmy donaldson ) தனது 13 வயதில் YouTube இல் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். இதனை தொடர்ந்து அவரது பெரும்பாலான வீடியோக்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் பார்வைகளைப் பெற்றதன் மூலம் அவர் மேலும் பிரபலமடைந்து வருகிறார். அத்துடன் அவரது வீடியோக்கள் பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜிம்மி டொனல்ட்சன் சேனல் துவங்கியதும் தனது நண்பர்களில் சிலரை தனது பிராண்டுடன் இணைந்து நடத்துவதற்கு பணியமர்த்தினார். தற்போது 2024 ஆம் ஆண்டின் நிலவரப்படி மிஸ்டர் பீஸ்ட் குழுவில் டொனால்ட்சன் உட்பட 250 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !
மிஸ்டர் பீஸ்ட் சேனலின் மூலம் நிறுவனர் ஜிம்மி டொனல்ட்சன் வெளியிடும் சாகச வீடீயோக்களுக்கு ஏராளமானவர்கள் பார்த்து ரசித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது வரை மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனலில் 807 வீடியோக்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜிம்மி டொனல்ட்சனின் மிஸ்டர் பீஸ்ட் சேனல் முப்பது கோடி சந்தாதாரர்களை பெற்றுள்ள முதல் யூடியூபர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதனையடுத்து அதிக சந்தாதாரர்களை கொண்டுள்ள மிஸ்டர் பீஸ்ட் சேனலின் வருவாய் மற்ற யூடியூப் பக்கங்களை ஒப்பிடும் போது சற்று அதிமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. MrBeast youtube channel.