அரசு பேருந்துகளில் இந்த பொருள்களுக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது: தமிழகத்தில் வாழும் மக்கள் தாங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல அரசு பேருந்துகளை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயணிகளுக்கு ஏற்ப போக்குவரத்து துறை தொடர்ந்து பல வசதிகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூப்பர் வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
அரசு பேருந்துகளில் இந்த பொருள்களுக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
அதாவது, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் கொண்டு செல்லும் உடைமைகளுக்கும் குறிப்பிட்ட எடை அளவிற்கு மேல் இருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் விதிமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில், லக்கேஜ் கட்டணத்தில் புதிய விதிகளை மாநகர போக்குவரத்து கழகம் அமல்படுத்தியுள்ளது.
இலவசமாக ஏற்றிச் செல்லக்கூடிய சுமைகள்:
- பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள்
- கேமரா போன்ற கையடக்கமான சாதனங்கள்
- லேப்டாப்
- கைக்குள் அடங்கும் மின் சாதன பொருட்கள்
- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள்
- கலை நிகழ்ச்சி வாத்திய கருவிகள்
நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 – மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!
20 கிலோவுக்கு மேல் எடையுள்ள சுமைகளுக்கு 1 பயணிகளுக்கு பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணிகள் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. சக பயணிகளை பாதிக்கும் விதமாக ஈரமான சுமைகளை அனுமதிக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் என்று அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது
மணிப்பூருக்கு 50 பட்டாலியன் துணை ராணுவத்தை அனுப்ப முடிவு
திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி!
இன்றைய தங்கம் விலை நிலவரம் (19.11.2024) !