முதல்வர் மருந்தகம் திட்டம் 2024: தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் மருந்தகம் திட்டம் என்ற புதிய திட்டம் குறித்து சுதந்திர தின விழா உரையில் தெரிவித்து இருந்தார்.
முதல்வர் மருந்தகம் திட்டம் 2024
அதில், ” பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளும் மற்றும் பிற மருந்துகளையும் மிக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்“ என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள நபர்கள் B-Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் or அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
உலகில் இந்தியர்களே இல்லாத நாடு எது தெரியுமா? – அடேங்கப்பா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
எனவே விண்ணப்பிப்பதன் மூலமாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மூன்று லட்சம் அரசு வழங்க இருக்கிறது. மேலும் இந்த திட்டம் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?
TVK தலைவர் விஜய் தலைமையில் முதல் போராட்ட அறிவிப்பு