மும்பை விளம்பர பலகை விபத்து விவகாரம் 2024: மும்பையில் 100 அடி உயரத்தில் ராட்சத விளம்பர பலகை ஒன்றை ஈகோ மீடியா என்ற நிறுவனம் மாநகராட்சியிடம் எந்த ஒரு அனுமதியின்றி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வீசிய புழுதி புயலால் ராட்சத விளம்பர பலகை கவிழ்ந்து மக்கள் மீது விழுந்தது. இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணமாக இருந்த ஈகோ மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான பாவேஷ் பிண்டே என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறது. தொடர்ந்து போலீஸ் விசாரணை செய்து வந்த நிலையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. அதாவது பாவேஷ் பிண்டே மீது ஏற்கனவே 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதில் ஒரு கற்பழிப்பு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காவல்துறை அவரை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளது. மும்பை விளம்பர பலகை விபத்து விவகாரம் 2024