மும்பை கிரிக்கெட் வாரியத் தலைவர் அமோல் காலே மாரடைப்பால் உயிரிழப்பு -  சோகத்தில் ரசிகர்கள்மும்பை கிரிக்கெட் வாரியத் தலைவர் அமோல் காலே மாரடைப்பால் உயிரிழப்பு -  சோகத்தில் ரசிகர்கள்

மும்பை கிரிக்கெட் வாரியத் தலைவர் அமோல் காலே மாரடைப்பால் உயிரிழப்பு: மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்து வருபவர் தான் அமோல் காலே. இவர் நேற்று நடந்த இந்தியா vs பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியை MCA அலுவலகப் பணியாளர்களுடன் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேரலையில் கண்டு களித்தார். இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலே அமெரிக்காவில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் இறப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

அவரின் இறப்பு குறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாக்டர் ஜிதேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அமோல் காலே இன் மறைவு குறித்து சோகமான செய்தியை கேட்டேன். அவர் மிகவும் நல்ல அமைப்பாளர் மற்றும் கிரிக்கெட் பிரியர். உலகிற்கு விடை பெறும் வயது அவருக்கு இல்லை . இது எனக்கு தனிப்பட்ட இழப்பு என்று தெரிவித்துள்ளார். அவர் மட்டுமின்றி பலரும் அவர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியீட்டு வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்.. பாட்னாவை சேர்ந்த 13 பேர் அதிரடி கைது… போலீஸ் தீவிர சோதனை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *