செல்போன் டார்ச் லைட்டில் பிரசவம் பார்த்த மருத்துவர்
செல்போன் டார்ச் லைட்டில் பிரசவம் பார்த்த மருத்துவர்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான குசுருதீன் அன்சாரி என்பவருக்கு ஷாஹிதுன் என்ற மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இதனை தொடர்ந்து ஷாஹிதுன் 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த வாரம் வலி ஏற்பட்டுள்ள நிலையில், பிரிஹன் மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர் ஒருவர் கையில் இருந்த செல்போன் மொபைலில் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் கடந்த நான்கு நாட்கள் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் அலட்சியமாக சிகிச்சை செய்த மருத்துவர்கள் தக்க தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே இது குறித்து இன்று பிரிஹன் மும்பை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்த பிரிஹன் மும்பை மாநகராட்சி இந்தியாவிலேயே மிகவும் செழிப்பான மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.