‘புஷ்பா 2’ திரைப்படம் மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட தாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ .. மயக்கம் போட்ட ரசிகர்கள் – என்ன நடந்தது தியேட்டரில்?
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. எல்லா இடங்களிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படம் வெளியான முதல் நாளில் கிட்டத்தட்ட 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து நேற்று ஹைதராபாத்தில் படம் பார்க்க சென்ற ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மும்பையில் ஒரு தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மும்பையில் இருக்கும் பாந்த்ரா என்ற பகுதியில் உள்ள திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தியேட்டர் உள்ளே ஸ்பிரே அடித்துள்ளார். இதன் காரணமாக படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இருமல், தும்மல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது.
விஜய்யின் உடல் எடை திடீர் அதிகரிப்பு – என்ன காரணம் தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!
இதன் காரணமாக தான் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விரைந்து வந்து தியேட்டரில் விசாரணை செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக தியேட்டரில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்