Home » செய்திகள் » முரசொலி செல்வம் மறைவு செய்தி – வீடியோ காலில் கதறி அழுத அழகிரி !

முரசொலி செல்வம் மறைவு செய்தி – வீடியோ காலில் கதறி அழுத அழகிரி !

முரசொலி செல்வம் மறைவு செய்தி - வீடியோ காலில் கதறி அழுத அழகிரி !

திமுகவின் முரசொலி செல்வம் மறைவு செய்தி தொடர்ந்து இதனையடுத்து அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Murasoli Selvam death news – Alagiri cried on Video

தற்போது ஆளும்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக இயக்குனராக இருந்த முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (அக்டோபர் 10) மரணமடைந்த நிலையில், அவரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முரசொலி செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரியான சண்முக சுந்தராம்பாள் மகன் ஆவார். அந்த வகையில் கருணாநிதியின் மகள் செல்வி என்பரை திருமணம் செய்துகொண்ட இவர்,

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முக ஸ்டாலின் மச்சான் முரசொலி செல்வம் மரணம் – ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் குடும்பத்தினர்!

அந்த வகையில் முன்னாள் எம்.பியும் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி வீடியோகாலில் கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை போல் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன் ஆகியோர் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுத காட்சிகள் வெளியாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top