நாம் உணவுகளில் எளிதாக பயன்படுத்தும் முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா, அத்துடன் அதன் பயன்பாடுகள் குறித்த முழு தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளது.health tips details in tamil
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா
JOIN WHATSAPP TO GET HEALTH TIPS NEWS
முருங்கைக்கீரை :
நமது அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிகளவு சத்துள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நமது வீடுகளுக்கு அருகில் எளிதாக கிடைக்கக்கூடிய கீரைகளில் ஒன்று தான் இந்த முருங்கைக்கீரை அதுமட்டுமல்லாமல் இதில் பல வகையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.Health Benefits of Moringa leaves
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் :
நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியமானது இரும்புச்சத்து. இதன் சத்தானது பிற கீரைகளை விட முருங்கைக்கீரையில் 25 மடங்கு அதிகமாக உள்ளது.
அத்துடன் ஃபிளாவனாய்ட்கள் அழற்சி மற்றும் புற்றுநோய்க்கு எதிராக உடம்பை பாதுகாக்க உதவுகிறது.
இதனை தொடர்ந்து முருங்கைக்கீரையில் உள்ள வைட்டமின் சி யானது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செல் சேதத்தைத் தடுக்க பெரிதும் பயன்படுகிறது.
அத்துடன் அதிகளவு நிறைந்துள்ள கால்சியமானது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சீராக்கவும், தசைகளின் செயல்பாட்டிற்கும் பயன்படுகிறது.
மேலும் முருங்கைக்கீரையில் உள்ள மக்னீசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம்,
அரைக்கீரை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் – இவ்வளவு பலன்கள் இருக்கா ?
உடல் நீர்ச்சத்து சமநிலையை பராமரித்தல், நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் ஆற்றல் உற்பத்தி மற்றும் சிவப்பு இரத்த அணு உருவாக்கத்திற்கு உதவுகிறது. murungai keerai health benefits
இதனை தொடர்ந்து வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 (தியாமின்), வைட்டமின் பி2 (ரிபோஃப்ளேவின்), வைட்டமின் பி3 (நியாசின்), வைட்டமின் பி6 (பைரிடாக்சின்), வைட்டமின் கே, பீட்டா கரோட்டீன் போன்ற வைட்டமின்கள்
பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, கொலாஜன் உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் செயல்பாடு, மேலும் ஆற்றல் உற்பத்தி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதனையடுத்து செல் வளர்ச்சி, புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக பாதுகாக்க முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் உதவுகிறது.