நடப்பாண்டு சீசனில் இனி வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர் விளையாடுவது கேள்விக்குறியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அணி
நடப்பாண்டு IPL போட்டியில் சிஎஸ்கே அணி புதிய கேப்டனான ருதுராஜ் தலைமையில் விளையாடி வருகிறது. இந்த சீசனில் தற்போது வரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் 2 வெற்றியை பெற்றுள்ளது. மேலும் நடந்த முடிந்த 3 போட்டிகளில் தன்னுடைய பிரம்மாண்டமான ஆட்டத்தை வ வெளிப்படுத்தியவர் தான் முஸ்தபிசுர் ரஹ்மான். சொல்லபோனால் ஆர் சி பி க்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளையும், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது கேள்வி குறியாக இருக்கிறது. அதாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 7 விக்கெட்டை கைப்பற்றி முதல் இடத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், ஆம் ஆண்டு கரீபியன் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை முன்னதாக தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்காளதேசத்திற்கு சென்றுள்ளதால் அவர் சென்னை அணியில் விளையாட வாய்ப்பு குறைவது தான் என என தகவல் வெளிவந்துள்ளது.