
கடந்த சில மாதங்களாக வெவ்வேறு இடங்களில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழுந்தது.
அதுமட்டுமின்றி அதே இடங்களில் அடுத்த 10 நிமிடங்களில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்வுகள் சந்தித்தால், மியான்மரின் மண்டலே நகரில் இருக்கும் மசூதிகள், வீடுகள் இடிந்து சுக்குநூறாகியது.
இது தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1600-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து, லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், மீட்பு படையினர் தொடர்ந்து இடர்பாடுகளில் சிக்கிய மக்களை தேடி வருகின்றனர்.
இன்றைய தமிழ் முக்கிய செய்திகள்:
CSK vs RCB 8th Match Preview: 16 ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கத்தில் தோற்று வரும் பெங்களூர்!!
உங்கள் பழைய AC யை மத்திய அரசிடம் விற்கலாம்! சற்று முன் வெளிவந்த சூப்பர் அறிவிப்பு
SRH vs LSG Today Match: லக்னோவை அடித்து ஊத போகும் ஹைதராபாத் 300ஐ தொடுமா?