மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வழக்கு :
பசுமை வழிச்சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 22.80 கிரவுண்டு நிலத்தில் ரூ.26.78 கோடி செலவில் கலாச்சார மையம் கட்ட 2023 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் கோவில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், கோவில் நிதியில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களின் ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என தமிழ்நாடு அரசு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !
மேலும் உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் தொடங்கப்படாது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலாச்சார மையம் கட்டத் தடை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.